தமிழர்களின் தொன்மையை அடையாளப்படுத்தும் கலைகளை ஊக்குவித்து, அம்மக்கள் வாழ்ந்த வாழ்வியல் நெறிகளை நினைவூட்டும் நிகழ்சிகளை வழங்குவதும், இலக்கிய சான்றுகள் அடிப்படையிலான வரலாற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதுவும் இத்தொலைக்காட்சியின் அடிப்படை நோக்கமாகும்.மேலே கூறப்பட்டுள்ள நோக்கம் நிறைவேற வேண்டுமாயின் மக்கள் சிறந்த வேளாண்மையை மேற்கொண்டு நலத்துடன் வாழ வேண்டும். அதற்கான வழிமுறைகளையும், பயிற்சியையும், சந்தைப்படுத்தும் முறைகளையும் நிகழ்ச்சிகள் வாயிலாக வழங்குவதையும் தலையாய பணியாகக் கொண்டுள்ளோம்.
இந்த இணையதள தொலைக்காட்சி சேவை எதிர்காலத்தில் எங்கள் திட்டத்திற்கான முன்னோட்டமே... தமிழர்களும், இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து கவனிக்க வேண்டிய தளம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.
- சேனல் தமிழ்www.channeltamil.tv